திருமணத் தடை நீக்கும் விரதம்!
In WEEKLY SPECIAL March 24, 2018 9:30 am GMT 0 Comments 3338 by : Ravivarman

முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம் அன்று கன்னிப்பெண்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.
வைகாசி மாதத்தில் பூரணச் சந்திரனும், விசாக நட்சத்திரமும் கூடிவரும் தினத்தை வைகாசி என்பார்கள்.
விசாக தினத்தில் காலையில் குளித்துப் பூஜை அறையில் முருகன் படத்திற்கு பூ, பொட்டிட்டு அஷ்டோத்திரம் செய்து. நைவேத்தியம் சமர்ப்பித்து பூசிக்க வேண்டும்.
திருப்புகழ், கந்தர் சஷ்டிகவசம், கந்தர் அநுபூதி ஆகிய நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.
பூஜை மேற்கொண்ட தினத்தில் இரவில் பால் மட்டும் உண்டு விரதமிருந்தால் பூரண பலன் கிடைக்கும். கோவிலில் சென்று முருகனை அபிஷேக ஆராதனைகளுடனும் வழிபடலாம். முருகனுக்கு விளக்கேற்ற நல்லெண்ணெய் உகந்தது. சந்நிதியில் நெய் விளக்குப்போடுவது சாலச்சிறந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.