திருவாதவூரில் அ.தி.மு.க – அ.ம.மு.க ஆதரவாளர்களுக்கிடையே மோதல்!

திருவாதவூரில் அ.தி.மு.க – அ.ம.மு.க ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்றது.
இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகின்றது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில், 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகின்றது. புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது.
தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன.
இந்தநிலையில் மதுரை அருகே மேலூரை அடுத்த திருவாதவூரில் அ.தி.மு.க – அ.ம.மு.க ஆதரவாளர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குச் சாவடியில் வாக்கு சேகரித்தமை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.