திரையரங்குகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை
In இலங்கை January 27, 2020 7:18 am GMT 0 Comments 1859 by : Dhackshala

நாட்டின் திரையரங்குகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசிகர்களை மீண்டும் ஈர்ப்பதே இதன் நோக்கமாகும் என தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரைப்படத்துறை எந்தவொரு நாட்டிலும் கலை ஊடகமாக வீழ்ச்சியடையவில்லை. எனவே, நாட்டில் திரைப்படத்துறை பின்னடைவைக் கண்டுள்ளது. இதனை மீண்டும் வழமை நிலைமைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க முடியும் என்று முன்னணி திரைப்பட இயக்குனர் திஸ்ஸ லியனசூரிய தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திரைப்படத்துறையை மேம்படுத்த அரசாங்கத்தின் அனுசரணை தேவை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.