திலீபன் நினைவு தினத்தன்று வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதி இல்லை!- மாநகர சபை
In இலங்கை September 22, 2018 7:57 am GMT 0 Comments 1617 by : Yuganthini
தியாகி திலீபன் நினைவேந்தல் காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபை நியாயாதிக்க எல்லையினுள் வேறெந்த நிகழ்வையும் நடத்த அனுமதிக்க கூடாதென யாழ்ப்பாணம் மாநகர சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கான ஒழுங்குபடுத்தல் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை யாழ். மாநகர சபையில் நடைபெற்றது.
இதன் போது உறுப்பினர் ஒருவரால், “தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தும் அதேவேளை, மாநகர சபை எல்லையினுள் நிகழ்வொன்றை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது. நிறைவில் எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய சுற்றுலா தின நிகழ்வுக்காக யாழ். மாநகர சபை மைதானத்தை வழங்குவதில்லை என்று கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஏக மனதாகத் தீர்மானித்ததுடன், உறுப்பினர்களின் தீர்மானம் பற்றி வட மாகாண சுற்றுலாத் துறை செயலணியின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.