திவுலபிட்டிய– பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்தது
In ஆசிரியர் தெரிவு December 4, 2020 3:29 am GMT 0 Comments 1334 by : Yuganthini

திவுலபிட்டிய– பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 628 கொரோனா தொற்றாளர்களில் 627பேர், திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடையவர்களென அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமையவே, திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26ஆயிரத்து 38ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து, நேற்று 728 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், இதுவரை 18 ஆயிரத்து 304 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 259 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் நேற்றும் ஐவர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக 129 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.