தி.மு.க. உள்ளவரை தமிழகத்தை கைப்பற்ற எவராலும் முடியாது: ஸ்டாலின்

சிந்தனையாளர் பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வாரிசுகள் உள்ள வரை பா.ஜ.க. தமிழகத்தில் கால்பதிக்க முடியாதென தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மண்டலத்தில் இடம்பெற்று வந்த தி.மு.க. மாநாட்டின் நிறைவு விழாவில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“லட்சக்கணக்கிலான தொண்டர்களில் ஒருவனாக நான் இருப்பேன். தி.மு.க.வை அழிக்க வேண்டும் என ஒரு கும்பல் திரிகின்றது. முக்கியமாக பா.ஜ.க.வினர் எம்மை அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் தற்போதைய தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வந்துவிடும்.
குறித்த தீர்ப்பு வந்தால் தற்போதைய ஆட்சியினர் வீட்டிற்கு செல்வார்கள். அதன் பின்னர் ஆறு மாத காலம் ஆளுநர் ஆட்சி இடம்பெறும். அடுத்து பொதுத்தேர்தல் நடைபெறும்.
அத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வோம். அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு எம்மை யாராலும் அசைக்க முடியாது” என ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த மாநாட்டுக்கான நிதியாக 5 கோடியே 10 லட்சம் ரூபாவை மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் சு.முத்துசாமி மற்றும் நிர்வாகிகள், ஸ்டாலினிடம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.