தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் – ஸ்டாலின்
In இந்தியா December 27, 2020 9:43 am GMT 0 Comments 1624 by : Jeyachandran Vithushan

தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பணிபுரிந்த காலத்தில் உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலா 3 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று, உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை வழங்கியபின் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக குழு மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையை தயாரித்து வருவதாகவும், அதில் ஆசிரியர் சங்க கோரிக்கையும் இடம்பெறும் என நம்புவோம் என்றும் கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளதாகவும், விரைவில் அந்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.