காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தீர்ப்பில் கூறவில்லை: கர்நாடகா அதிரடி!
In இந்தியா March 23, 2018 7:14 am GMT 0 Comments 1408 by : Ravivarman

உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு குறிப்பிடவில்லை என மத்திய நீர்வளத்துறையின் செயலாளருக்கு கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர் இன்று (வெள்ளிக்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாகக் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் ஒரு வாரகால அவகாசம் மட்டுமே உள்ளது.
எனினும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிடவில்லை. செயற்திட்டம் மட்டுமே உருவாக்க உத்தரவிட்டுள்ளது. காவிரிப் பிரச்சனைத் தீர்வுக்குழு, கண்காணிப்பு ஆணையம் ஆகிய இரு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட இரு அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தின் நதிநீர்ப் பங்கீடு குறித்த தீர்ப்பை அமுல்ப்படுத்தி, நீர்ப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க வேண்டும்’ என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.