துடுப்பாட்ட திறனை அதிகரிக்க ரஹானே புதிய முயற்சி!

அண்மைக்காலமாக மந்தமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திவரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணைத் தலைவர் அஜிங்கிய ரஹானே, தனது துடுப்பாட்ட திறனை அதிகரிக்க புதிய முயற்சியொன்றை கையாளவுள்ளார்.
தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியை வழிநடத்திவரும் ரஹானே, எதிர்வரும் உலகக்கிண்ண தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. இதற்கு அவரது அண்மைக்கால மோசமான துடுப்பாட்டமே காரணம்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள ரஹானே, இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட் தொடரில் விளையாட, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் அனுமதி கோரியுள்ளார்.
இதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கினால், அவர் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.