துணிச்சலாக களமிறங்கிய 2 பெண்கள்: கள்ளநோட்டு அச்சடித்து நூதன முறையில் பரிமாற்றம்!
In இப்படியும் நடக்கிறது October 15, 2018 7:51 pm GMT 0 Comments 1439 by : Litharsan

தமிழ்நாட்டின் சென்னை நகரில் கள்ளநோட்டுக்கள் அடித்து நூதனமான முறையில் விநியோகம் செய்துள்ள இரு பெண்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கள்ளநோட்டுக்களை கடையொன்றில் விநியோகம் செய்ய முற்பட்டவேளை சந்தேகப்பட்ட வியாபாரி பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கவே குறித்த பெண்கள் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டனர்.
இதன்போது அச்சடிக்கப்பட்ட 36 அயிரம் ரூபாய் பெறுமதியாக கள்ளநோட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் தெரிவயருவதாவது, தமிழ்நாட்டின், சென்னை அமைந்தகரையிலுள்ள ரெயில்வே காலனி விதியில் மருந்து கடை ஒன்றில் பெண்ணொருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார்.
அது கள்ளநோட்டு போல் இருந்ததால் சந்தேகம் அடைந்த குறித்த வர்த்தகர், தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், அந்த பெண்ணிடம் இருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் ரூ.36 ஆயிரம் பெறுமதியான 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, கொளத்தூரைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவர் தனக்கு இந்த கள்ளநோட்டுகளை கொடுத்ததாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சத்யலட்சுமி என்ற பெண்ணும் இவரும் சேர்ந்து சென்னை அண்ணாநகரில் தெரு ஓரத்தில் உணவுக்கடை நடத்தி வந்தனர். அந்த தொழிலில் நஷ்டம் ஏற்படவே என்ன செய்யலாம் என யோசித்தபோது, “யூ டியூப்பில்” கள்ளநோட்டுகள் அச்சடிப்பது எப்படி? என்ற வீடியோவை பார்த்தனர்.
அதன்படி ரூ.2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடிப்பது எப்படி? என்று பார்த்துவிட்டு அதன்படியே கொளத்தூரில் உள்ள சத்யலட்சுமி வீட்டில் வைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளை பிரதியெடுத்து கள்ளநோட்டுகளை தயாரித்தனர்.
அத்துடன் அந்த கள்ள ரூபாய் நோட்டுகளை பல்வேறு இடங்களில் உள்ள கடைகளுக்கு சென்று அவசரமாக பொருட்கள் வாங்குவது போல் நடித்து, புழக்கத்தில் விட்டுள்ளனர். அத்துடன் கட்சி பிரமுகர் ஒருவரின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்ததுடன் சத்யலட்சுமி வீட்டில் இருந்து கள்ளநோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், பணம் நகல் எடுக்கப் பயன்படுத்திய கடதாசிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றினர்.
இந்த விவகாரம் தொடர்பில் குறிப்பிடப்பட்ட கட்சிப் பிரமுகரிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.