ரியூசியாவில் அகதிகள் பயணித்த படகு விபத்து : 80 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

ரியூசியாவில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி படகில் பயணம் செய்துள்ளனர். அந்த படகில் 80 இற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
ரியூசியா கடற்பகுதியில் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிக எடையால் படகு திடீரென கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீரில் மூழ்கியவர்களில் நால்வரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். எனினும் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்தில் 80 இற்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.