துப்பாக்கி பாவனைக்கு கட்டுப்பாடு: சட்டமூலத்தில் புளோரிடா ஆளுநர் கையொப்பம்
In அமொிக்கா March 10, 2018 3:28 am GMT 0 Comments 1935 by : Suganthini
துப்பாக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தில் புளோரிடா மாநில ஆளுநர் ரிக் ஸ்கொட் (Rick Scott ) நேற்று (வெள்ளிக்கிழமை) கையொப்பமிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் தானியங்கித் துப்பாக்கியினால் பழைய மாணவரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 17 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாடசாலை பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்றழைக்கப்படும் சட்டமூலத்தில், புளோரிடா மாநில ஆளுநர் கையொப்பமிட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு துப்பாக்கிகளை விற்பனை செய்யத் தடை, துப்பாக்கிக் கொள்வனவின்போது 3 நாள் காத்திருக்கும் அவகாசம், பயிற்சி பெற்ற பாடசாலைத் தொழிலாளர்கள் மாத்திரம் கைத்துப்பாக்கிகளை எடுத்துச்செல்ல அனுமதி, பாடசாலைகளில் புதிய உளநல சுகாதாரத் திட்டங்களை முன்னெடுத்தல், வன்முறையாளர்கள் மற்றும் உளநல பாதிப்புக்குள்ளானவர்கள் துப்பாக்கிகளைக் கையாள்வதைக் கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்கள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.