துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் அஜித்
In சினிமா December 6, 2020 8:46 am GMT 0 Comments 1204 by : Yuganthini

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித்குமார், தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடிகர் அஜித்குமார் இப்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்தது.
குறித்த படத்திற்காக முதலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அஜித் ‘பைக்’கில் வேகமாக செல்வது போல் ஒரு காட்சி படமானது.
அதாவது சண்டை காட்சியில் மாத்திரம் 7 நாட்கள் தொடர்ந்து நடித்து வந்த அஜித், பின்னர் சென்னைக்கு திரும்பினார்.
இந்நிலையில் தற்போது அஜித்குமார், துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். துப்பாக்கி சுடுவதில் அவருக்கு மிகவும் ஆர்வம் உள்ளதாகவும் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.