துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூட நடவடிக்கை!
In அமொிக்கா March 5, 2018 8:26 am GMT 0 Comments 1668 by : Suganthini

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியின் தலைநகர் அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை மறு அறிவித்தல்வரை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தூதரகத்தை இன்று (திங்கட்கிழமை) மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளபோதிலும், அவசரசேவைகள் இடம்பெறுமெனவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
துருக்கியிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் பொதுவிடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள், தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் சுற்றுலா இடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனவும், கூறியுள்ளனர்.
இதேவேளை, அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அங்காராவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென்று அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்தே, அமெரிக்கத் தூதரகத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.