தென்கரோலினாவில் மாடித் தளம் உடைந்ததில் 30 பேர் படுகாயம்!
தென் கரோலினாவின் க்ளெம்ஸன் மாடித் தொகுதியில் உள்ள களியாட்ட சங்கக் கட்டிடத்தின் தளம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த அனர்த்தம் தொடர்பில் ஜெரெமி டெஸ்டர் என்பவர் காணொளியொன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடமாடுவதற்கான மாடித் தளம் உடைந்ததால் கீழ் தளத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட மக்கள் இடிபாடுகளில் இருந்து வௌியேறு காட்சியை அவர் பதிவு செய்திருந்தார்.
அனர்த்தம் பற்றி அவர் ரொய்ட்டரிடம் கூறுகையில், க்ளெம்சன் பல்கலைக்கழகத்தின் வரவேற்பு நிகழ்வொன்றுக்காக களியாட்ட சங்க மண்டபத்தில் கூடியிருந்த மக்களே இந்த அனர்த்தத்திற்கு முகம்கொடுத்ததாக தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மாடித் தளத்தில் நடனமாடிக் கொண்டிருந்த தருணத்தில் திடீரென பாரம் தாங்காது அந்த தளம் உடைந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாரேனும் உயிராபத்துமிக்க வகையில் காயமடைந்துள்ளார்களா என்று உறுதியாக கூற முடியாது என உள்ளூர் பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.