தென்னாபிரிக்கா- ஆஸி டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு: WTCஇன் இறுதிப்போட்டிக்கு முன்னேற நியூஸி. வாய்ப்பு

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக் காரணமாக, தென்னாபிரிக்கா அணியுடனான சுற்றுப்பயணத்தை அவுஸ்ரேலியா ஒத்திவைத்துள்ளது.
தென்னாபிரிக்காவில் உள்ள சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு (இரண்டாவது தொற்றலை மற்றும் புதிய மாறுபாடு) காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்ரேலியா விளக்கம் அளித்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைத் தவிர்ப்பதன் மூலம் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்ரேலியா தகுதிபெறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
இதேவேளை தென்னாபிரிக்காவுடன் விளையாடுவதற்கு அவுஸ்ரேலியா தயார் இல்லையென்றால் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து தகுதிபெறும்.
அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, தென்னாபிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. தற்போது பாகிஸ்தானிலும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.