தென் அமெரிக்காவிலிருந்து பயணிகள் இனி பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை!
In இங்கிலாந்து January 15, 2021 10:50 am GMT 0 Comments 2036 by : Anojkiyan

பிரேஸிலில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த அச்சங்களுக்கு மத்தியில், தென் அமெரிக்காவிலிருந்து பயணிகள் இனி பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை.
பிரித்தானியாவின் இந்த புதிய பயணத் தடை போர்த்துகல் மற்றும் கேப் வெர்டேவிற்கும் பொருந்தும். இது வெள்ளிக்கிழமை 04:00 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.
பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வகைகளைப் போலவே, பிரேஸில் மாறுபாடும் மேலும் தொற்றுநோயாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் ஒரு தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இப்போது மூன்று மில்லியனை நெருங்குகிறது.
கடந்த 10 நாட்களில் அர்ஜென்டினா, பிரேஸில், பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், பிரெஞ்ச் கயானா, கயானா, பராகுவே, பெரு, சுரினாம், உருகுவே மற்றும் வெனிசுவேலாவிலிருந்து பயணம் செய்த மக்களுக்கும் பிரித்தானியாவின் புதிய பயணத் தடை பொருந்தும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.