தென் கொரியாவில் புதிதாக 1,030 பேருக்கு கொரோனா தொற்று
In உலகம் December 13, 2020 3:21 am GMT 0 Comments 1468 by : Jeyachandran Vithushan

தென் கொரியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 1,030 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றினை கட்டுப்படுத்துவதில் ஆரம்ப வெற்றியைப் பெற்ற நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பதிவாகும் அதிகூடிய எண்ணிக்கை இது என தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 766 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 588 ஆகவும் அதிகரித்துள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொற்று பரவல் தொடர்ந்தால் நாட்டில் சமூக விலகல் கட்டுப்பாட்டை மேலும் இறுக்குவது தவிர்க்க முடியாதது என பிரதமர் சுங் சை-கியூன் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதேவேளை நேற்று சனிக்கிழமையன்று, தென் கொரியாவில் புதிதாக 950 தொற்று நோயாளிகள் பதிவாகியதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.