தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற வீட்டிலிருந்து இரத்தினக்கற்கள் மீட்பு!
In இலங்கை April 28, 2019 7:06 am GMT 0 Comments 2799 by : Dhackshala

கொழும்பு தெமட்டகொடயில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டிலிருந்து இரத்தினக்கற்கல் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
30 மில்லியன் பெறுமதியுடைய இரத்தினக்கல் மற்றும் 15 மில்லியன் பெறுமதியுடைய இரத்தினக்கல் உட்பட 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அந்த வீட்டிலிருந்து தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வெடிப்பு சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.