தெற்கில் தமிழ் – சிங்கள மக்கள் இணைந்து நடத்திய ஊர்வலம்
மாத்தறை – தெனியாய ஆண்டாரதெனிய சுஹதாராமய விஹாரையில் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து சமாதான ஊர்வலமொன்றை நடத்தினர்.
இந்த ஊர்வலம், தெனியாய 51 சந்தியில் ஆரம்பமாகி சுமார் 7 கிலோமீற்றர் தூரம் வரையிலான ஆண்டாரதெனியாய விஹாரை வரை நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதில் தமிழ் மற்றும் சிங்கள கலாசார நடனங்கள் இடம்பெற்றதோடு சிறுவர்களின் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் மூலம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை பலப்படுவதாக இப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.