தெஹிவளையிலும் குண்டுவெடிப்பு – இருவர் உயிரிழப்பு பலர் படுகாயம்
In இலங்கை April 21, 2019 8:43 am GMT 0 Comments 1511 by : Dhackshala
தெஹிவளையிலும் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றிலேயே குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளை எஸ்.டி.எஸ் விளையாட்டரங்கிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த பகுதியில் மற்றுமொரு குண்டு இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், அதை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து தெஹிவளை மிருககாட்சிசாலை முடப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கூட்டமொன்று குறித்த மைதானத்தில் நேற்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.