தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக முன்வருவோம் – சஜித்
In இலங்கை February 4, 2021 3:35 am GMT 0 Comments 1304 by : Dhackshala

தேசத்தின் உண்மையான சுதந்திரத்திற்காக முன்வருவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்
தமது தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இனம், மதம், கட்சி, நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒரே தாயின் பிள்ளைகளாக பணியாற்றிய வரலாறு மிகவும் உணர்வுபூர்வமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறையாண்மை கொண்ட நாட்டில் ஒரு கொடியின் நிழலில் வாழ வேண்டும் என்ற தூய்மையான நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களையும் ரத்தம், வியர்வை, கண்ணீர் சிந்திய வீரர்களையும் நினைவில் கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.