தேசிய அளவில் புதிய சாதனை படைத்த சாய் பல்லவி!
In சினிமா February 8, 2020 5:32 am GMT 0 Comments 1698 by : Amilkanth Ayyathurai

நடனம் மீது ஆர்வம் கொண்ட சாய் பல்லவி, ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ’மாரி 2’ படத்தில் இவர் ஆடிய ‘ரவுடி பேபி’ பாடல் யூட்யூபில் 750 மில்லியன் பார்வைகளைத் தாண்டி புதிய சாதனையினைப் படைத்தது.
பிரபல Forbes India இணையதளம் வெளியிட்டுள்ள Forbes India 30 Under 30 பட்டியலில் சாய் பல்லவி இடம்பிடித்துள்ளார். இந்திய அளவில் 30 வயதுக்கு கீழ் உள்ள பல்வேறு துறைளைச் சேர்ந்த சாதனை படைத்தவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சுமார் 255 பேரின் பங்களிப்பை பரிசீலித்து இந்த பட்டியலை உருவாக்கியுள்ளதாக Forbes India இணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 27 வயதான சாய் பல்லவியுடன் இந்த பட்டியலில், கவுரவ் சவுதரி எனும் யூட்யூபர், ராப்பிடோ சேவை நிறுவனர்கள உள்ளிட்ட 30 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இடம்பிடிப்பது தனக்கு பெரும் கெளரவமளிப்பதாக சாய் பல்லவி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.