தேசிய சுகாதார சேவைக்கான தேவைகள் அதிகம் : பிரதமர் பொரிஸ் ஜோன்சன்
In இங்கிலாந்து November 14, 2019 2:52 pm GMT 0 Comments 1644 by : S.K.Guna

அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளர் காத்திருப்பு நேரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக இன்று வெளியான புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இதனடிப்படையில் தேசிய சுகாதார சேவைக்கான (NHS) தேவைகள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மூன்று மாதங்களில் தேசிய சுகாதார சேவைகள் மீது மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை நாம் மேற்கொண்டோம். மேலும் 34 பில்லியன் பவுண்ஸ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் குறைந்த நேரமே காத்திருக்க வேண்டும். அதேபோன்று அவர்கள் அருகிலுள்ள பொது மருத்துவரைப் (GP) பார்க்க குறைந்த நேரமே காத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜெரமி கோர்பினின் போட்டி முன்மொழிவுகள் ஒரு பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் நீண்ட காலத்திற்கு தேசிய சுகாதார சேவைக்கு நிதியளிப்பதை சாத்தியமாக்காது என்றும் ஜோன்சன் விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.