தேர்தல்களம் சூடுபிடிப்பு: அரவக்குறிச்சியில் பழனிசாமி பிரசாரம்
In இந்தியா May 5, 2019 6:14 am GMT 0 Comments 2096 by : Yuganthini

அரவக்குறிஞ்சி சட்டப்பேரவை தொகுதியில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபடவுள்ளார்.
இதற்காக சென்னையிலிருந்து விமானத்தின் ஊடாக சேலம் விமான நிலையத்தை அவர் வந்தடையவுள்ளார். அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பின்னர் தேர்தல் பிரசாத்தில் பழனிசாமி ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முதல்வரின் வருகையை முன்னிட்டு சேலம் விமான நிலையம், நெடுஞ்சாலை நகர் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தமிழகத்தில் அரவக்குறிஞ்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.