தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அந்தவயைில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரின் ஹக்லே ஒவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) இந்தப் போட்டி நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது. அந்த வகையில் முதலில் துடப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நியூஸிலாந்து அணி சார்பில் ஷான்ட்னர் 67 ஓட்டங்களையும், நிக்கொல்ஸ் 55 ஓட்டங்களையும் மற்றும் குப்தில் 47 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் குறுகிய ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
பந்துவீச்சில் கிரிஸ் வோக்ஸ் மற்றும் ரஷிட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹூரன் 2 விக்கெட்டுகளையும், மார்க் வூட், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
224 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 32.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து தனது இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணி சார்பில் பயர்ஸ்ரோவ் 104 ஓட்டங்களையும், ஹகலெஸ் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பௌல்ட், ஷான்ட்னர் மற்றும் ஷோதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக பயர்ஸ்ரோவ் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.