தொடர் குண்டு தாக்குதல்களின் எதிரொலி – தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை!
In இலங்கை April 22, 2019 12:42 pm GMT 0 Comments 2062 by : Krushnamoorthy Dushanthini

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக தனியார் கத்தோலிக்க பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வண.ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஏசு பிரானின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மக்கள் வழிப்பாடுகளில் ஈடுப்பட்டிருந்த வேளையில் தற்கொலைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் காரணமாக 290 பேர் உயிரிழந்துள்ளதுடன்,500 இற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாடசாலை மற்றும் தனியார் நிறுவனங்கள்,பல்கலைக்கழகங்கள் என அனைத்திற்கும் இரண்டுநாள் விடுமுறையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.