தொடர் தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்க தூதரகம் மூடப்படுகின்றது – முக்கிய அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு April 28, 2019 12:12 pm GMT 0 Comments 3081 by : Jeyachandran Vithushan

அமெரிக்க தூதரகம் மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து அமெரிக்க இடங்களும் மே மாதம் 3 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அமெரிக்க குடியுரிமை சேவைகள் மற்றும் பயண ஆலோசனைகள் போன்ற சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இதேவேளை இலங்கையிலுள்ள அமெரிக்க பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் முன்னர் அறிவித்தல் விடுத்தது.
குறிப்பாக இலங்கையில் பணியாற்றுகின்ற அமெரிக்க அரசாங்க அதிகாரிகளது குடும்ப அங்கத்தவர்களான முன்பள்ளி மாணவர்கள் முதல் 12ம் தர மாணவர்கள் வரையானவர்களை நாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.