தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், தொண்டைமானாறு சின்னக் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றதுடன் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்பே கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில், உடுப்பிட்டி சந்தைப் பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது-17) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதுகுறித்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.