தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவர், பிரதமர் முன்னிலையில் பதவியேற்பு
In இலங்கை December 29, 2020 10:10 am GMT 0 Comments 1445 by : Yuganthini

தொம்பே பிரதேச சபையின் புதிய தலைவராக காரியப்பெருமகே பியசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்றார்.
விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
தொம்பே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மிலான் ஜயதிலக, கடந்த பொதுத் தேர்தலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் காரியப்பெருமகே பியசேன இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.