தொற்று பரவல் தீவிரம்: ஜப்பானில் முக்கிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு முக்கிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிப்பு தீவிரமாக உள்ள டோக்கியோ, சிபா, சைதாமா மற்றும் கனகவா ஆகிய மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அவசர நிலை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாடசாலை, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.
அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்படும்.
மேலும் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும்படியும் கூடுமானவரை வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.