தொலைக்காட்சி பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர் – பருத்தித்துறையில் பதற்றம்
In இலங்கை April 24, 2019 9:45 am GMT 0 Comments 2826 by : Dhackshala

பருத்தித்துறை நகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்கர் காட்சி அறையின் முன்பாக வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு தீ வைத்துக்கொழுத்திய மர்ம நபரால் பருத்தித்துறையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சிங்கர் காட்சி அறையின் முன்பாக வைக்கப்பட்டிருந்த பழைய தொலைக்காட்சி பெட்டிகளே இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.39 மணியளவில் மர்ம நபரால் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளது.
நீளக்காட்சட்டை மற்றும் முழுக்கை சட்டையுடன் கையில் தீப்பெட்டியுடன் வந்த மர்ம நபர், சில வினாடிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரு தொலைக்காட்சி பெட்டிகளை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இக்காட்சிகள் சிங்கர் காட்சி அறையின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
இதனை பார்வையிட்டுள்ள புலனாய்வுப் பிரிவினர் அந்த மர்ம நபர் குறித்த விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
ஈஸ்டர் பெருநாளில் நாட்டை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து நாடு முழுவதும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் மர்ம நபரது இச்செயற்பாடு பருத்தித்துறையில் பெரும் பதற்றத்தை எற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.