தொழிற்கட்சியின் சுங்க ஒன்றிய திட்டத்துக்கு எதிராக ஜெரமி ஹண்ட் எச்சரிக்கை!
In இங்கிலாந்து April 30, 2019 1:48 pm GMT 0 Comments 2525 by : shiyani

ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுங்க ஒன்றியத்தில் நிலைத்திருப்பதை உள்ளடக்கிய தொழிற்கட்சியின் பிரெக்ஸிற் திட்டத்தை ஒப்புக்கொள்வதற்கு எதிராக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்தகைய உடன்படிக்கையொன்றை அரசாங்கம் ஒப்புக்கொள்வதால் பாராளுமன்றத்தில் பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான டோரி உறுப்பினர்களின் ஆதரவு குறையுமெனவும் ஹண்ட் எச்சரித்துள்ளார்.
ஆனாலும் சுங்க ஒன்றியத்துக்கான அரசாங்கத்தின் ஆதரவிலேயே பிரெக்ஸிற் ஒப்பந்தத்துக்கான தொழிற்கட்சியின் ஆதரவு தங்கியுள்ளதாக தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் வலியுறுத்தியுள்ளார்.
பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகளின்போது சுங்க ஒன்றியம் குறித்த விடயத்தில் அரசாங்கம் சமரசம் செய்வதற்கு மருத்துள்ளதாக தொழிற்கட்சி குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் மட்டுமின்றி சர்வதேச வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் உட்பட வேறு சில அமைச்சர்களும் தொழிற்கட்சியின் சுங்க ஒன்றிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.