தொழிற்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவையாக அமைந்துள்ளன: ஹண்ட்
In இங்கிலாந்து April 15, 2019 8:39 am GMT 0 Comments 2531 by : shiyani

எதிர்க்கட்சியான தொழிற்கட்சியுடன் ஆளுங்கட்சியால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானவையாக அமைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்பை சேர்ந்தவர்களும் எதிர்பார்த்ததை விட விரிவானவையாகவும் பயனுள்ளனவாகவும் அமைந்துள்ளதாக ஹண்ட் இன்று பிபிசி வானொலி சேவைக்கு வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் தொடர்பாக பாராளுமன்றத்தில் நிலவும் தடைகளை முறியடிக்கும் நோக்குடன் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
அமைச்சர்களான டேவிட் லிடிங்டன் மற்றும் மைக்கேல் கோவ் ஆகியோருடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்ததாக தொழிற்கட்சியின் நிதித்துறை பேச்சாளர் ஜோன் மெக்டோனல் தெரிவித்திருந்தார்.
மேலும் அடுத்து வரும் 10 நாட்களில் மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கான நேர அட்டவணையொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார். இந்தப் பதவியேற்ப நிகழ
-
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து க
-
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நடைமுறையில் செயற்படுத்த முடிய
-
ஜோ பிடனின் பதவியேற்புக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன்னர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள
-
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வ
-
கொரோனா தொற்றினால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க இடமளிக்க முடியாது என்றும் அடிப்படை வசதி
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளால் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா