தொழிற்கட்சியுடன் சமரசத்தை எட்டமுடியுமென நிதியமைச்சர் நம்பிக்கை!
In இங்கிலாந்து April 26, 2019 11:46 am GMT 0 Comments 2533 by : shiyani

தொழிற்கட்சியுடனான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக அமைந்ததாகவும் சமரசத்தை எட்டமுடியுமென நம்புவதாகவும் நிதியமைச்சர் பிலிப் ஹம்மண்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த பல வாரங்களாக தொழிற்கட்சியுடன் ஆளுங்கட்சி முன்னெடுத்து வரும் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருதரப்பினரிடையேயும் பொதுவான நிலையொன்றை கண்டறியமுடியுமென நான் நம்புகிறேன். இரு தரப்பினருக்குமே தெளிவான நிலைப்பாடுகள் உள்ளன.
உடன்பாடொன்றை எட்டுவதற்கு இருதரப்பினருமே சமரசம் செய்ய வேண்டும் என ஹம்மண்ட் தெரிவித்தார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் எதுவுமின்றி வெளியேறுவதை தாம் விரும்பவில்லை எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.