தொழிற்கட்சியுடன் பிரெக்ஸிற் உடன்பாடு எட்டுவது எளிதானது: பிரித்தானிய அமைச்சர்
In இங்கிலாந்து May 6, 2019 8:04 am GMT 0 Comments 2708 by : Risha

பிரித்தானிய அரசாங்கத்திற்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையே பிரெக்ஸிற்றுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்து விடயங்களும் ஒப்புகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய ஊடகமொன்றுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த பிரித்தானிய அமைச்சர் றொறி ஸ்டுவர்ட் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி விரைவில் பிரெக்ஸிற் உடன்பாடொன்று எட்டப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சி உண்மையாக பிரெக்ஸிற் ஒப்பந்தமொன்றை விரும்புமாக இருப்பின் அதனை எட்டுவது இலகுவானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.