தொழிலைக் கற்பதற்காக மகனை நோயாளியாக்கிய கொடூரத் தாய்!
In இப்படியும் நடக்கிறது February 11, 2019 7:18 am GMT 0 Comments 1563 by : Litharsan

தாதியாகப் பணியாற்றிவரும் பெண்ணொருவர் தொழிலில் தேர்ச்சியடையவதற்காக தனது மகனை நோயாளியாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் டென்மார் நாட்டில் இடம்பெற்றுள்ளது.
டென்மார்க்கைச் சேர்ந்த 36 வயது பெண்ணொருவர் தாதியாக பணிபுரிந்து வந்துள்ளார். தாதி தொழிலில் பயிற்சி பெறுவதற்காக தனது 7 வயது மகனின் உடலில் இருந்து ஒவ்வொரு வாரமும் ½ லீற்றர் இரத்தம் எடுத்துவந்துள்ளார்.
தனது மகன் 11 மாத குழந்தையாக இருந்ததில் இருந்தே அந்த பெண் இவ்வாறு செய்து வந்துள்ளார். அதாவது 5 ஆண்டுகள் தொடர்ந்து இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்தார்.
இது குறித்து வெளியுலகிற்கு தெரிய வரவவே அந்த பெண் மீது வழக்குத் தொடரப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதோடு தாதியாக பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் கொடூரம் என்னவெனில் மகனின் உடலில் இருந்து வாரந்தோறும் எடுத்த ½ லீற்றர் இரத்தத்தை கழிவறையில் கொட்டிவிடுவதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த சிறுவன் குடல் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறான்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.