தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு ஒருங்கிணைப்பாளர் கைது
In இலங்கை April 28, 2019 4:30 pm GMT 0 Comments 3879 by : Jeyachandran Vithushan

தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மொஹமட் பாருஸ் மொஹமட் பவாஸ் என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக வாழைத்தோட்டம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 38 வயதுடைய குறித்த நபர் அப்பகுதியிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பொன்றில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் சுவரொட்டிகள், போதனைகள் அடங்கிய USB ஃபிளாஷ் டிரைவ்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.