தௌஹீத் ஜமாத் என்ற ஒரு குழுவினால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது – அமைச்சர் பரபரப்பு தகவல்
In இலங்கை April 22, 2019 8:18 am GMT 0 Comments 2660 by : Jeyachandran Vithushan
உள்நாட்டில் உள்ள தௌஹீத் ஜமாத் என அடையாளபடுத்தப்பட்ட ஒரு குழுவினால் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தற்கொலை தாரிகள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாக்குதல் நடத்திய குழுவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்போ அல்ல என்று ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை பொலிஸார் அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.