த்ரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு!
In சினிமா May 4, 2019 3:54 am GMT 0 Comments 2269 by : Krushnamoorthy Dushanthini

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள ‘பரமபத விளையாட்டு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று (சனிக்கிழமை) வெளியாகவுள்ளது.
1999ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை த்ரிஷா சுமார் 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.
இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் புரமோஷன் பணிகளும் ஆரம்பமாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிமுக இயக்குனரான திருஞானம் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ரிச்சர்ட், நந்தா, அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோன உள்ளிட்ட பலர் நடத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.