கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் நாளை!
In இலங்கை March 19, 2018 9:53 am GMT 0 Comments 1383 by : Yuganthini

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நாளை காலை 9.00 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 27 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு வடக்கு கிழக்கு முழுவதும் நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கான நிகழ்வு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.