உலக கோப்பைக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் – கோஹ்லி
In கிாிக்கட் December 9, 2020 6:00 am GMT 0 Comments 1680 by : Dhackshala

நடராஜன் டி20 உலக கோப்பைக்கு தங்களுக்கு கிடைத்த சொத்து என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி புகழ்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நிலைகளிலான போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்திய அணியின் முகமது சமி மற்றும் பும்ரா விளையாடாத நிலையில், இருபது ஓவர் போட்டியில் இடதுகை பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியில் இணைக்கப்பட்டார்.
தனது அறிமுக போட்டியிலேயே அவரது அற்புதமான ஆட்டத்தினால், டி 20 தொடரில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில், டி20 உலக கோப்பைக்கு தங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி புகழ்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார். நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார்.
சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார்.
இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து. இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும’ என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.