நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் விஷால் போட்டியா?
In சினிமா May 7, 2019 3:57 am GMT 0 Comments 1740 by : adminsrilanka

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து நடிகர் விஷால் தலைமையிலான குழுவினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
குறித்த கூட்டத்தில் விஷால், நாசர், பூச்சி முருகன், ரமணா, வழக்கறிஞர் கிருஷ்ணா ஆகியோர் பங்குபற்றினர்.
எஞ்சியிருக்கும் பணிகளை நிறைவு செய்வது, அதற்காக தேவைப்படும் நிதியை திரட்டுவது, தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது என்பன இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நடிகர் சங்க தேர்தலில் கடந்த 2015ம் ஆண்டு நடந்த தேர்தலில் விஷால் தலைமையிலான அணி போட்டியிட்டு வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும் விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன், ஜூலையில் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.