நடிகைகள் மறுத்ததால் வாய்ப்பளிக்க மறுத்த ‘சங்க’ நடிகர்!
In கிசு கிசு March 20, 2019 9:05 am GMT 0 Comments 2525 by : Ravivarman

ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல கவர்ச்சி நடிகை மறுத்ததால் நடிகர் கோபமடைந்து அந்த நடிகைக்கு யாரும் இனிமேல் வாய்ப்பளிக்கக்கூடாதென கூறிவருகின்றாராம்.
சங்க நடிகர் தற்போது நடித்துவரும் ரீமேக் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட பிரபல ஆபாச பட நடிகையை அணுகினார்களாம். நடிகை ஆட சம்மத்திப்பார் என்று நடிகர் எதிர்பார்த்த நிலையில், நடிகை மறுத்து விட்டாராம்.
இந்நிலையில் தெலுங்கு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். அந்த நடிகையும் ஆட மறுத்து விட்டதால் சங்க நடிகர் பயங்கர கோபத்தில் இருக்கின்றாராம்.
ஒரு வழியாக தமிழ் வாய்ப்பு இல்லாமல் ஹிந்திப் பக்கம் சென்ற நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆட வைத்திருக்கிறார்களாம். பல நடிகைகள் ஆட மறுத்ததால் நடிகர் கோபமடைந்து விட்டதால் அந்த நடிகைகளுக்கு இனிமேல் வாய்ப்பு வழங்குவதில்லை என முடிவெடுத்திருக்கின்றாராம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.