நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை!
In சினிமா December 9, 2020 2:42 am GMT 0 Comments 1925 by : Krushnamoorthy Dushanthini

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறித்த பொலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அத்துடன் இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது இரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.