நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது: மம்தா பானர்ஜி
In இந்தியா May 3, 2019 3:07 am GMT 0 Comments 2066 by : Yuganthini
நரேந்திர மோடியால் மீண்டும் பிரதமராக முடியாதென மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கான கணக்கை நீங்கள் கூறுங்கள் என்றும் செய்தியாளர்களை அவர் கேட்டுள்ளார்.
மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணியுடன் புதிய அரசு அமையும் எனவும் மம்தா பானர்ஜி நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை பிரதமர் மோடிக்கு குர்தா மற்றும் இனிப்பு அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அது கொல்கத்தாவின் கலாசாரமாகும், அரசியலமைப்பு பொறுப்பில் உள்ளவர்களுக்கு குர்தாவை அனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.