நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் – வவுனியாவில் கருத்தரங்கு

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் அரசியல் கருத்தாடல் நிகழ்வு வவுனியாவில் நடைபெற்றது.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகப் பகுதிகளில் அரசியல் ரீதியில் பொதுமக்கள் படும் அவலநிலைகள் குறித்த கருத்தாடல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.
இக்கருத்தாடல் நிகழ்வில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் த.வசந்தராஜா, தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவர் லி.நவநீதன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், ஆகியாரின் சிறப்பு அரசியல் சமூகக் விழிப்புணர்வுகள் தாங்கிய கருத்தாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான அனந்தி சசிதரன், ஐங்கரனேசன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், லிங்கநாதன், தியாகராசா, ஈரோஸ் அமைப்பின் தலைவர் துஸ்யந்தன் உட்பட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.