நல்லூரான் செம்மணி வளைவு பொங்கல் தினத்தன்று திறக்கப்படும் என அறிவிப்பு
In ஆசிரியர் தெரிவு January 6, 2021 4:48 am GMT 0 Comments 1649 by : Dhackshala
யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட நல்லூரான் செம்மணி வளைவு எதிர்வரும் 14 ஆம் திகதி பொங்கல் தினத்தன்று நண்பகல் 12 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
நல்லூர் கந்தப் பெருமானின் அடியவர்களின் வேண்டுகளுக்கு அமைய நல்லூர் முருகன் தண்ணீர் பந்தல் சபையினரின் முயற்சியால் இந்த வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மக்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களின் புனித வாழ்க்கை நெறியான கந்தபுராண கலாசாரத்தின் அடையாளங்கள் பல இவ்வளைவில் வனப்புற பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த வளைவு அமைக்க முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், நிதியொதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுத்ததோடு, தனது சொந்த நிதி உதவிகளையும் வழங்கியிருந்தார்.
2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குறித்த வளைவுக்கான அடிக்கல் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டி வைத்து, வளைவின் கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.