நல்லூர் பகுதியில் ஐஸ்கிறீம் கடையொன்றில் தீ விபத்து!

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பருத்தித்துறை வீதியில் அமைதுள்ள குறித்த கடையின் சமையல் அறையிலேயே தீ ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம், இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாணம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக உடனடியாக மாநகர தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.