நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியோரை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது – பிரதமர்
In இந்தியா December 13, 2020 8:03 am GMT 0 Comments 1375 by : Dhackshala

நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியோரை இந்தியா ஒருபோதும் மன்னிக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள் 8 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில், தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தின் 19ம் ஆண்டு நினைவுதினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு ருவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தைப் பாதுகாப்பதற்காக உயிர் இழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவுகூர்வதாகவும், அவர்களுக்கு இந்தியா எப்போதும் நன்றி கடன்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.